சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடியது. இந்த கூட்டம் பாஜக என்ன முடிவு செய்யப்போகிறது ? என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை தாமதமாக கலந்து கொண்டாலும்,  கூட்டத்தில் பல்வேறு முக்கியமான விஷயங்களை அவர் பேசியிருக்கிறார்.

மிக முக்கியமாக அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துக்கின்ற நிலையில்,  அது தொடர்பாக பாஜக என்ன கருத்து தெரிவிக்க போகின்றது என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்,  அதைப்பற்றி நாம் ஏன் பேச வேண்டும் ? நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் செல்லட்டும். அது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு விருப்பம் என்று மாநில நிர்வாகிகளிடம் அண்ணாமலை திட்டமிட்டமாக பேசியிருக்கிறார்.

அதே நேரத்தில் கூட்டணி முடிவு தொடர்பாகவும், அடுத்த கூட்டணி தொடர்பாகவும் அகில இந்திய பாஜக தலைமை தான் முடிவு செய்யும். மாநில தலைமை இதில் தலையிடுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமா ? அதிமுகவுடன் செல்ல வேண்டுமா ? புதிய கூட்டணி அமைக்க வேண்டுமா ? என்று தன்னுடைய கருத்தை அகில இந்திய பாஜக தேசிய தலைவர்கள் ஜேபி நட்டாவிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டேன் என்று அண்ணாமலை மாநில நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார்.