சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடியது. இந்த கூட்டம் பாஜக என்ன முடிவு செய்யப்போகிறது ? என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை தாமதமாக கலந்து கொண்டாலும்,  கூட்டத்தில் பல்வேறு முக்கியமான விஷயங்களை அவர் பேசியிருக்கிறார்.

மிக முக்கியமாக அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துக்கின்ற நிலையில்,  இந்த விவகாரத்தை அகில இந்திய தலைமை மட்டும் தான் முடிவு செய்யும். அவர்கள் விரும்பினால் அதிமுக தலைவர்களை தேசிய தலைவர்கள் அழைத்து பேசி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய கூட்டத்தை பொருத்தவரை திமுக அரசுக்கு எதிராக அடுத்த 7 மாதங்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களை பாஜக தீவிர படுத்த வேண்டும.  மகளிர் உரிமை தொகை  கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பெண்களுக்கு வழங்குவதற்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும் என அண்ணாமலை பேசியிருக்கிறார்.

மிக முக்கியமாக அண்ணாமலை என்மன் என் மக்கள் யாத்திரை முடிவில் ஜனவரி இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருவது இந்த கூட்டத்தின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தை பொருத்தவரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தமிழகத்துக்கு வந்து பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து உரையாற்ற இருக்கிறார் என பேசி உள்ளார்.