தமிழர்களின் பாரம்பரிய காலை உணவாக இட்லி திகழ்கின்றது. ஆனால் இட்லியின் அதீத நன்மை குறித்து தற்போது உள்ள இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே இட்லி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். அரிசி, உளுந்து ஆகிய இரண்டையும் சேர்த்து ஊற வைத்து நன்கு அரைத்து மாவாக்கிய பிறகு அதனை இட்லியாக சமைத்து சாப்பிடுவதால் இரண்டு மடங்கு அதிக சத்துணவாக மாறுகின்றது என சமீபத்திய ஆய்வு வெளியாகி உள்ளது.
அரிசியிலும் உளுந்தம் பருப்பிலும் அதிகப்படியான சத்துக்கள் இருக்கிறது. பலவிதமான விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் , இரும்புச்சத்து, பாஸ்பரஸ் என்று இதன் சத்துக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த சத்துக்கள் உடலில் உருவாகும் நச்சுக்களை அழிக்கும் என்று சொல்லப்படுகின்றது. மேலும் இட்லி சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு விதமான அமினோ அமிலங்கள் கிடைக்கிறது.
உடலில் பழுதடைந்த திசுக்களை சரி செய்ய லைசின் என்ற அமிலம் உதவும். காம அமீனோ பாட்ரிக் அமிலங்கள் சிறுநீரகத்தின் வேலைகளை பத்து மடங்கு அதிகரிக்கிறது. அதிலும் உடலுக்கும் அவசியமான நல்ல தாது உப்புகள் கிடைக்கிறது. லைசென் அமிலங்கள் இட்லி வழியாக உடலுக்கு உடனடியாக கிடைப்பதால் பசி உடனே அகன்று மனதிருப்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என இட்லியை அதிகம் சாப்பிடக்கூடாது. மூன்று அல்லது நான்கு இட்லிக்கு மேல் சாப்பிடுவது நல்லது இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே அளவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.