இன்றைய அவசர உலகில் பெரும்பாலானோர் துரித உணவுகளையே அதிகம் உட்கொள்கின்றனர். இந்த துரித உணவுகளில் பிரதான இடத்தை பிடித்திருப்பது பரோட்டா என்றால் அது மறுபதற்கு இல்லை. ஆனால் நாம் உண்ணும் பரோட்டா உடலுக்கு எத்தகைய தீங்கினை விளைவிக்குது என்பதை சற்றும் யோசிப்பதில்லை. கோதுமையால் செய்யப்பட்ட பரோட்டா என்றால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அதுவே மைதாவால் செய்யப்பட்ட பரோட்டாவை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்வது உடலில் பல்வேறு நோய்கள் உண்டாக வாய்ப்பு இருக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

ஏனென்றால் மைதாவானது கோதுமையில் வெளிப்புற பகுதி மற்றும் நார்ச்சத்து நீக்கப்பட்டு வெறும் ரசாயனங்கள் சேர்த்து ப்ளீச் செய்யப்படுவதால் அதனால் செய்யப்படும் உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், 20 முதல் 25 வயதிலேயே மாரடைப்பு போன்ற பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர். மருத்துவர்கள். மைதாவால் செய்யப்படும் அனைத்து உணவு பொருட்களும் அடிக்கடி சாப்பிடுவது நல்லது இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் தூக்கமின்மையும் நேரம் தவறிய உணவு முறையும் கூட சர்க்கரை நோய், டிபி உள்ளிட்ட நோய்களுக்கு மூல காரணமாக அமைவதாக கூறுகின்றனர். எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து பரோட்டா மட்டுமின்றி மைதாவால் செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். எனவே மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க முடிந்தவரை மைதா உணவுகளை தவிர்த்து முறையான உணவு பழக்கங்களால் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.