பொதுவாக ஏலக்காய் என்றால் குழந்தைகள் ஒதுக்கி விடுவார்கள். ஏன் பெரியவர்கள் கூட சில சமயம் அதை ஒதுக்கி விடுவார்கள். அப்படி ஒதுக்கப்படும் ஏலக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாந்தி, குமட்டல், வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு இந்த ஏலக்காயை எடுத்துக் கொள்ளலாம். கால போக்கில் அந்த அனைத்து பிரச்சனையும் குணமடைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

இதை வாயில் போட்டு மென்று வந்தால் ஸ்வாச பிரச்சனை சீராக்கப்படும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வு தரும் என்று சொல்லப்படுகின்றது. கடுமையான வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் ஒரு ஏலக்காய் போட்டு சாப்பிட்டு வந்தால் அந்த பிரச்சனை நிவர்த்தி செய்யப்படுகின்றது. சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மென்று வந்தால் நாளடைவில் சளி பிரச்சனை குணமாகும்.

சளியும் காலப்போக்கில் கரைந்து நிரந்தர நிவாரணம் தரப்படுகிறது என சொல்லப்படுகின்றது. பசியின்மை பிரச்சனை சிலருக்கு இருக்கும் அதாவது என்ன உணவு கொடுத்தாலும் அதை பெரிதாக விரும்ப மாட்டார்கள். அப்படியானவர்கள் ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் உடம்பில் இருக்கும் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்று பசி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.