வளரும் குழந்தைகளுக்கு டீ, காபி போன்றவற்றை கொடுத்து பழகலாமா என்ற கேள்வி எழுகின்றது. எனவே முன்னோர்கள் கூறும் கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு டீ, காபி ஆகியவற்றை கொடுக்காமல் பால் தர வேண்டும் என்றும் அந்த பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கொடுத்தால் மிகவும் நல்லது என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் வளரும் குழந்தைகளுக்கு பழங்களை கொடுத்து பழக்க வேண்டும் என்றும் குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்களைக் கொடுப்பது மிகவும் நல்லது. இது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு ஆகிய பழங்கள் கொடுக்கலாம். காய் வகைகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். காய்கறிகள், பழங்கள் மற்றும் மிளகு பால் குடிப்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.