மாதவிடாய் வராவிட்டால் அனைத்து பெண்களும் ஏதேதோ நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் கர்ப்பம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். மாதவிடாய் வர தாமதமானால் அது கர்ப்பமாக இருக்குமோ என நினைத்து அச்சத்தில் உறைந்து போகும் பெண்களும் உண்டு. ஆனால் ஏன் தாமதமாகின்றது என்று கேள்விக்குறியாகவே இருக்கும். அது ஏன் என்ற கேள்விக்கு இந்த தொகுப்பு பதிலாக அமையும். மன அழுத்தம் மாதவிடாய் தள்ளி போவதற்கான முக்கிய காரணியாக அமைவதாக கூறப்படுகின்றது.

இந்த மன அழுத்தம் மிகவும் கொடியது. தூக்கம் சீர்குலைப்பதாக சொல்லப்படுகின்றது. மாதவிடாயை ஒழுங்குபடுத்தும் ஹைபோதலாமஸை மன அழுத்தம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. ஆனோ ரக்ஷயா, நேவஷா அல்லது பொலிமியா போன்ற உணவு கோளாறுகளுடன் வாழும் மக்கள் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு ஆளாகின்றனர். நம் உடலில் ஏற்படும் எடை மாற்றம் மாதவிடாய் இழப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

பி.சி.ஓ. எஸ் என்பது தாமதமான அல்லது முறையற்ற மாதவிடாய் தொடர்பான நிலையாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் இருக்கலாம். மேலும் கருப்பையில் நீர்கட்டிகள் உருவாகலாம். இந்த நிலை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இது கருமுட்டை உருவாவதை பாதிக்கவோ நிறுத்தவோ செய்யலாம். இதனால் மாதவிடாய் வராமல் போகலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.