தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், திமுக அரசின் செயல்பாட்டால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

சொன்ன வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றவில்லை. எல்லா நிலைகளிலும் தினந்தோறும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறேன். எங்க போடுறீங்க நீங்க ? எங்க போடுறீங்க அறிக்கையை….  ஓபிஎஸ் அறிக்கை வந்திருக்குன்னு DMKவிடம் சொல்லி இருக்கீங்க நீங்க. இதெல்லாம் நியாயமா ? நானும் சில உண்மைகளை சொல்ல வேண்டியது இருக்குல்ல.

காவேரி விவகாரத்தில் தினமும் பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கின்றேன்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், காவிரி நதிநீர் ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு.  எல்லாமே இந்திய அரசியல் சட்டப்படி நடைபெற்று அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு.

அந்தத் தீர்ப்பின்படி தண்ணீர் தரவேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. அதை மறுக்கிறார்கள் என்று சொன்னால் ? இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறார்கள் என்று தான் அர்த்தம். எல்லா கட்சியிலும் பஞ்சாயத்து நடந்துகிட்டு தானே இருக்கு. எச்.ராஜா சொன்ன மாதிரி பஞ்சாயத்து எல்லாம் நாங்க பேசுனது இல்லை என தெரிவித்தார்.