தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள மொழி படங்களில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை பூமிகா சமீபத்திய பேட்டியில் நடிகர் நடிகைகளின் வயது வித்தியாசம் குறித்து பேசியுள்ளது தற்போது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் நடிகை பூமிகா கூறியதாவது, ஹீரோக்கள் தன்னை விட குறைந்த வயது நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்கிறார்கள். நடிக்கிறார்கள்.

இதை நடிகைகளும் செய்யலாம். தன்னைவிட குறைந்த வயது நடிகர்களுடன் நடிகைகள் நடித்தால் அதை இயக்குனர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மூத்த நடிகைகள் பெரும்பாலும் கமர்சியல் படங்களில் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த வயது வித்தியாசம் வெப் சீரிஸ் களில் மாறி வந்தாலும் கமர்சியல் படங்களில் இன்னும் கடைபிடிக்கப்படுகிறது. ஹீரோக்கள் மட்டும் இன்னும் ஹீரோக்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நடிகைகள் புறந்தள்ளப் படுகிறார்கள். இந்த காலத்திலும் இப்படி நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது தன்னை விட வயது குறைந்த ஆண்களை பெண்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு அர்ஜுன் கபூர்- மல்லிகா அரோரா, பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ். இவர்கள் தன்னைவிட குறைந்த வயதுடைய ஆணை   திருமணம் செய்து கொள்ளும்போது மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு ஆணால் தன்னைவிட குறைந்த வயது பெண்ணுடன் வாழ முடியும் போது ஒரு பெண்ணால் அப்படி வாழ முடியாதா. அதேபோன்று தன்னைவிட பாதி வயது குறைந்த நடிகையுடன் ஒரு நடிகரால் ரொமான்ஸ் செய்ய முடியும் என்றால் அது நடிகைகளாளும் முடியும். என்னுடைய மகன் வயது உடைய நடிகர்களுடன் என்னால் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க முடியும் என கூறியுள்ளார்.