60 வயதில், ஜெர்மன் மாடல் ஜினா ட்ரெவலோவ்ஸ்கி, அழகு, தன்னம்பிக்கை மற்றும் எந்த வயதிலும் வாழ்க்கையை தழுவுவதற்கு புதிய வரையறை அளித்துள்ளார். பரிஸ் ஃபேஷன் வீக்கில், லோரியல் பரிஸின் புகழ்பெற்ற லே டெஃபிலே நிகழ்ச்சியில் முதன்முறையாக ரன்வேயில் நடந்து, உலகின் கவனத்தை ஈர்த்தார்.

அவரது குறைவற்ற தோல், உறுதியான உடலமைப்பு மற்றும் பிரகாசமான தன்னம்பிக்கை, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது பெண்களுக்கு அவர்களின் வலிமை மற்றும் திறனை நம்புவதற்கு உத்வேகம் அளிக்கும் ஒரு செய்தியாக அமைந்தது. ஜினாவின் இந்த அசத்தல் அறிமுகம், வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே என்பதை உலகிற்கு நிரூபித்தது.

 

View this post on Instagram

 

A post shared by Gina Drewalowski (@ginadrewalowski)

58 வயதில், ஜினா தனது ஃபேஷன் மற்றும் உள்ளடக்க பயணத்தை தொடங்கினார். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தன்னம்பிக்கை, ஆரோக்கியம் மற்றும் சுய அன்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளடக்கங்களை உருவாக்கத் தொடங்கினார். இன்ஸ்டாகிராமில் தனது பயணத்தை பகிர்ந்து, “58 வயதில், பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினேன்.

ஆர்வம், புரிந்துணர்வு மற்றும் பெண்களை உற்சாகப்படுத்தும் தைரியம் மட்டுமே இருந்தது,” என குறிப்பிட்டார். அவரது 60-வது பிறந்தநாளில், பரிஸ் ஃபேஷன் வீக்கில் நடந்து ஒரு மைல்கல்லை எட்டினார்.

“வயது நம்மை கட்டுப்படுத்தாது,” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு, விடாமுயற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நேர்மறையான மனநிலையின் மூலம் புதிய உயரங்களை அடைய முடியும் என்பதை உணர்த்தியுள்ளார்.