மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன் என்று கூறியுள்ளார். சில மணி நேரம் கடந்தும் குழந்தையை வாங்க அவர் வரவில்லை பின்னர் ரயில் மதுரையிலிருந்து கிளம்பிய நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை அடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ரயில் சேலத்தை அடைந்ததும் காவல்துறையினர் வீரமணியிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தையை காவல்துறையினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.