தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பாண்டு பட்ஜெட் குறித்துப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் அருண்ராஜ் இந்த பட்ஜெட்டை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
“இந்த பட்ஜெட்டுக்குத் தான் கொடுக்கும் மதிப்பெண் பூஜ்ஜியம் (Zero)” எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களுக்குத் தேவையான எந்த ஒரு உருப்படியான திட்டமும் இதில் இடம் பெறவில்லை என விமர்சித்துள்ளார்.
கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது அடுக்கடுக்காகப் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மக்களை ஏமாற்றும் வேலை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலையைத் தொடர்ந்து தற்போது தவெக-வும் இந்த பட்ஜெட்டை கடுமையாக எதிர்ப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
