தமிழக அரசின் பட்ஜெட் குறித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று ஆவேசமாகவும், பெருமிதமாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார். “ஒரு நிதிநிலை அறிக்கை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒன்றிய அரசும் இங்கே வந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் நேரடியாக சவால் விடுத்துள்ளார். தமிழக பட்ஜெட்டில் அனைத்துத் தரப்பினருக்குமான திட்டங்கள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​பெண்கள், ஆண்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த நிதிநிலை அறிக்கையைத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் முழுமனதாக வரவேற்பதாகக் கூறிய அவர், மக்கள் நலனை முன்னிறுத்திச் செயல்படும் திராவிட மாடல் அரசுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். நயினார் நாகேந்திரன் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் செல்வப்பெருந்தகையின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.