தெரு நாய்கள் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, “காலையில் ஒரு நாய் எந்த மனநிலையில் இருக்கும் என்று யாரால் கணிக்க முடியும்? நாய்களின் மனநிலை தெரியாததால் அது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், “ஒரு ஆணின் மனதையும் யாராலும் படிக்க முடியாது; அவர் எப்போது பாலியல் வன்கொடுமை செய்வார் அல்லது கொலை செய்வார் என்பது யாருக்கும் தெரியாது – அதற்காக எல்லா ஆண்களையும் தூக்கி ஜெயிலில் போட்டுவிடலாமா?!” எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாய்கள் மீது கருணை காட்டினால் தாக்குதல்களைத் தவிர்க்கலாம் என மனுதாரர்கள் வாதிட்ட போது, நீதிபதிகள் இந்த ‘மனநிலை’ குறித்த கருத்தை முன்வைத்தனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களிலிருந்து நாய்களை அகற்றி காப்பகங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ரம்யாவின் இந்த ‘ஆண்கள் vs நாய்கள்’ ஒப்பீடு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து அனல் பறக்க விவாதிக்கப்பட்டு வருகிறது.
