லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் பிரயாக்ராஜ் மாக் மேளா விழாவில், பாதுகாப்புப் பணியில் இருந்த உ.பி மாநில காவலர் ஒருவர், சீருடையில் இருந்தபோதே அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தள்ளாடியபடி நின்றிருந்தார்.
இதனைப் பார்த்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி, “சீருடையில் பெயர் பலகை கூட இல்லை, இப்படி போதையில் இருந்தால் எப்படிப் பாதுகாப்பு கொடுப்பீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
प्रयागराज: माघ मेले ड्यूटी पर लगा पुलिस कर्मी शराब के नशे में झूम रहा है।
एक पत्रकार ने वीडियो बनाकर वीडियो वायरल किया है। pic.twitter.com/9848AQgj31
— Rahul Saini (@JtrahulSaini) January 11, 2026
அதற்குப் பதிலளித்த அந்தக் காவலர், போதை தள்ளாட்டத்தில் குளறுபடியான குரலில், “ரொம்ப குளிராக இருக்கிறது (Thand Lagi Hai)… அதான் கொஞ்சம் உடம்பை சூடாக்கிக்கொண்டேன்” என்று மழுப்பலாகக் கூறி நழுவ முயன்றார்.
கமிஷனர் கடும் கட்டுப்பாடுகளை விதித்த பிறகும், புனிதமான விழாவில் காவலரே இப்படிப் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, “மக்களைப் பிடித்தால் அபராதம் போடும் போலீஸ், இப்போது என்ன செய்யப்போகிறது?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
