ஹரியானா மாநிலம் குருகிராமில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேஹா, தனது தாத்தாவின் மீது வைத்திருந்த அளவுக்கடந்த பாசத்தால் எடுத்த விபரீத முடிவு ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த தனது தாத்தாவின் பிரிவைத் தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி, “அம்மா, அப்பா என்னை மன்னியுங்கள். நான் தாத்தாவை சந்திக்கப் போகிறேன்.
என்னைத் தேட வேண்டாம். அருகிலுள்ள மயானத்தின் குளத்தில் நான் இருப்பேன்” என உருக்கமாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார்.
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போலவே, அந்த மயானக் குளத்தில் இருந்து மாணவியின் உடல் மீட்கப்பட்டது பெற்றோரை நிலைகுலையச் செய்துள்ளது. பாசத்திற்காக ஒரு இளம் மொட்டு இப்படித் தனது வாழ்வை முடித்துக்கொண்ட சம்பவம் குருகிராமில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
