
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதோடு 2 வருட சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள அறிவார்ந்த மக்களுக்கு திராவிட மாடல் ஆட்சி என்ன என்பது புரியும். இந்த ஆட்சியின் முகம் சமூக நீதி. ஜாதி மற்றும் மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் என்னவென்று புரியாது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை கிடைத்துள்ளது.
அதோடு பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவிகள், விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் அனைவருக்கும் பலன் கிடைத்துள்ளது. என்னால் முடிந்த வரைக்கும் ஓய்வின்று என்னுடைய சக்திக்கு மீறி பணியாற்றி வருகிறேன். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதற்கு என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். எங்களுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்மை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் விடியல் உண்டாக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வருடங்களுக்கு பிறகும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்று நம்பிக்கையாக இருப்பதாக கூறினார்.