அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவருடைய காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வடசேரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கருப்புக்கொம்பன் காளை பங்கேற்றது.

இந்த காளை மாட்டை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்ட போது திடீரென  ஒரு கம்பில் மோதி மயங்கி விழுந்தது. இதனால் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளை மாடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதன்பின் உயிரிழந்த மாட்டின் சடலம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் தன் காளையின் இறுதி நினைவுகள் தொடர்பான வீடியோவை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய twitter பதக்கத்தின் வெளியிட்டு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.