செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ஆகஸ்ட் 17 ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எனக்கு 60 வயது நிறைவை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு 60ஆம் பிறந்த நாளை முன்னிட்டு,  இயக்கத்தின் ஓராண்டு கால நடவடிக்கையாக….

சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்,  ஜனநாயக சக்திகளை ஐக்கியபடுத்துவோம் என அறைகூவல் விடுத்தோம். தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் இந்த மணிவிழா,  சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவதற்கான  கருத்து பரப்பும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் இன்றைக்கு அகில இந்திய அளவில் பிஜேபி தனிமைப்பட்டு நிற்கிறது. எதிர்க்கட்சிகள் 26 கட்சிகள் ஒன்று சேர்ந்து,  ஜனநாயக சக்திகளாக அணிதிரண்டு ”இந்தியா” என்கின்ற கூட்டணியாக எழுச்சி பெற்று இருக்கின்றது. ஆக விடுதலைச் சிறுத்தைகளின் கனவு மெல்ல மெல்ல நினைவாகிறது என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

அந்த ”இந்தியா” கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரு அங்கம் என்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. வருகின்ற 31, செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் ”இந்தியா” கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் கூடுகிறோம், கலந்தாய்வு செய்ய இருக்கின்றோம். ஆக சனாதன சக்திகளை தனிமைப்படுத்தி,  ஜனநாயக சக்திகளை ஐக்கிய படுத்துகின்ற பெரும் முயற்சி வெற்றிகரமாக கைகூடி இருக்கிறது என தெரிவித்தார்.