சென்னையில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூர்  மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தலா 10 கோடி லிட்டர்  கடல் நீரை குடிநீராக்கும் திட்ட மூலம் வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் வசிக்கும் 19 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இதேபோன்று கூடுதலாக நாள் ஒன்றுக்கு 15 கோடி லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,

தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் 4,276 கோடி செலவில் நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையும் என்றும்,

2026-ம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவு பெற்று  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சி பகுதிகளில் உள்ள 22 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.