நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, சபாநாயகர் அவர்களே.. நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி அடைந்து  பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாட்டில் 1962- இல் கடைசி வெற்றி கிடைத்தது. இவ்வளவு ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்கள் சொல்கிறார்கள்…. காங்கிரஸ் நோ கான்ஃபிடன்ஸ். தமிழ்நாட்டின் மக்கள் சொல்கிறார்கள்…  காங்கிரஸ் நோ கான்ஃபிடன்ஸ்.  மேற்கு வங்கத்தில் கடைசி வெற்றி 1972-ல் கிடைத்தது.

கடந்த  51 ஆண்டுகளாக மேற்கு வங்க மங்கள் செல்கிறார்கள் காங்கிரஸ் நோ கான்ஃபிடன்ஸ். உத்தர பிரதேஷ், பீகர் ஆகியமாநிலங்களில்  காங்கிரஸ் கடைசியாக 1986-இல் ஜெயித்தது. இத்தனை ஆண்டுகளாக மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை என்று சொல்கிறார்கள். திரிபுராவில் கடைசியாக 1988இல் வெற்றி கிடைத்தது. 35  வருஷமாக திரிபுரா மக்கள் காங்கிரஸின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார்கள்.

ஒரிசாவில் காங்கிரஸிற்கு 1995இல் வெற்றி கிடைத்தது. ஒடிசாவில் கூட 28 ஆண்டுகளாக காங்கிரஸ்_சுக்கு மக்கள்  ஒரே பதிலை தான் சொல்கிறார்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. நாகலாந்து மாநிலத்தில் காங்கிரஸ் கடைசியாக வெற்றி பெற்று 1988.  இங்குள்ள மக்களும் 35 ஆண்டுகளாக சொல்கிறார்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறார்கள்.

டெல்லி, ஆந்திர பிரதேஷ், மேற்கு வங்காளத்தில்  ஒரு எம்எல்ஏ கூட இவர்களின் எண்ணிக்கையில் இல்லை. மக்கள் பலமுறை காங்கிரசின் மீது நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார்கள். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…!  இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு முக்கியமான தகவல் சொல்ல போகிறேன்.  உங்களுடைய நன்மைக்காக தான் சொல்கிறேன் உட்காருங்கள்…

நான் இந்த நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டகளுக்கு  என்னுடைய மன வேதனை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பெங்களூரில் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகளுக்கான ஒரு கூட்டணிக்கு கடைசி காரியம் செய்திருக்கிறீர்கள். ஜனநாயக முறைப்படி எனக்கு உங்கள் மீது சோகம்,  வேதனை ஏற்படுகிறது என தெரிவித்தார்.