செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, மணிப்பூரில் ஒரு கலவரம் நடந்தால், அந்த கலவரத்திற்கு மணிப்பூர் அரசு பொறுப்பேச்சு,  அந்த மணிப்பூர் அரசையே கலைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இவர்கள் குறள் கொடுக்கிறார்களே….  தமிழகத்தில்  இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 15 இல் இருந்து 20 சம்பவங்கள் நடந்துள்ளது.

நாங்கள் சுட்டிக் காட்டிய போது அதை வேறு மாதிரி பார்த்தார்கள். 2021 இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ? உங்களுக்கு தெரியும். நாங்குநேரி பக்கத்தில் உள்ள மூலக்கரைபாட்டியை பட்டியை சேர்ந்த முத்துராம் என்பவர் பாளையங்கோட்டை சிறைக்குள்  தாக்குதல் ஏற்பட்டு,  உடலை இரண்டு மாசம் வாங்காம போராடிக் கொண்டு இருந்தார்கள். இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளது.

சீவலப்பேரி என்கின்ற பகுதியில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். கோர்ட்டில் சாட்சி ஏற்றிவிட்டார்கள். சாட்சி சொல்லப்போறாரு, என அந்த சாட்சியையே கொலை செய்யுறாங்க.

முக்கூடல் பக்கத்துல மகனை தேடி வராங்க… மகன் இல்ல,  அப்பாவை கொலை பண்றாங்க.

செங்கோட்டையில் யூனியன் சேர்மன் உடைய பையன்  குளிக்கிற இடத்துல சண்டை, அதுக்கா பட்டப்பகல்ல 11 மணிக்கு ரெண்டு பேரு  கொல்றாங்க. காவல்துறை என்ன பண்ணிட்டு இருக்குது ? சட்ட ஒழுங்காக என்ன பாதுகாக்கிறார்கள் ?

அம்பாசமுத்திரம் வட்டம்,  பாப்பாகுடியின்ற ஒன்றியத்தில் முக்கூடல் என்ற பகுதிக்கு அருகாமையில் உள்ள பல்லாக்கால் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த மாணவர்களுக்கு….  அருகாமையில் உள்ள அடைகாணி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மோதலை ஏற்ப்பட்டது.

செல்லூர் சூரியன் என்ற மாணவன் கல்லால் அடித்து  இறக்கிறார்.

திசையன்விளை பக்கத்தில் முத்தையா என்பவர் ஒரு சமுதாயத்தின் பெண்ணை காதலிக்கிறார். அவரை ரெண்டு பேரு கொல்ல பண்றாங்க.  ஆனால் அந்த கேசஷை காவல்துறை திட்டமிட்டு மறைத்து,  அந்த சமுதாயத்துக்குள் கொலை நடந்ததாக சொல்லிடுச்சி. கடந்த 15 நாட்களுக்கு முன்பாக ஏமாற்றினார்கள்.

முக்கூடலில் ஆறுமுகம் என்பவரின் பையன் தீண்டாமை புகார் அளித்ததற்காக அவங்க  வீட்டில் வந்து பாக்குறாங்க அந்த பையன் இல்லை, அவுங்க அப்பாவை கொலை பண்றாங்க.

சிதம்பரத்தில்  மாதவரம் என்பவர் சீவலப்பேரியில் சாட்சி சொல்ல போனதுக்காக  கொலை செய்யப்படுகிறார்.

பால்கட்டளை பகுதியில் பேச்சி ராஜா என்பவர்  சாட்சி சொல்லக் கூடியவர் என்பதற்காக கொலை பண்றாங்க.

நடுக்கல்லூர்ல நம்பிராஜன் என்பவரை படுகொலை பண்றாங்க.

வீரவநல்லூர்ல அருணாசலகுமார்  என்பவரை படுகொலை செய்யுறாங்க.

தென்காசியில் செங்கோட்டையில்EX சேர்மனின் பையனை கொலை பண்ணுறாங்க.

புளியங்குடியில் தங்கசாமி என்பவரை கொல்லுறாங்க,

கடையநல்லூரில் ஆவடி காலனியில் சாமி என்பவரை கொலை பண்ணுறாங்க.

இது போல இவுங்க ஆட்சிக்கு வந்த பிறகு.. திருநெல்வேலி , தென்காசி இந்த ரெண்டு மாவட்டத்தில் மட்டும் இத்தனை சம்பவம் நடக்கிறது. ஏன் நடக்குது ? என்ன நடவடிக்கை எடுத்தாங்க ? இவுங்க எப்படி சட்ட ஒழுங்கை பேசுறது ? என லிஸ்ட் போட்டு பேசினார்.