அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை அன்பு சகோதரர்களே… பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் ஒரு முக்கியமான கருத்தை நான் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

இன்றைக்கு நாட்டை ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம் முதல் இட கட்சியாக இருக்கிறது. வலுவான கூட்டணிகளை கொண்டு, தங்களது வாக்கு வழங்கியை உறுதிப்படுத்திய காங்கிரஸ் – விடுதலை சிறுத்தைகள் – இரண்டு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக்கொண்டு,  ஒரு வலுவான கட்சியாக திமுக முதலிடத்தில் இருக்கிறது.

எடப்பாடியின் தவறுதலான வழிகாட்டுதலால், ஆட்சியை இழந்து விட்டு –  கட்சியும் இரண்டு, மூன்றாக உடைந்து இரண்டாவது இடத்தில் அண்ணா திமுக இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு பாஜக இருக்கிறது.

அப்படி மூன்றாவது இடத்தில் இருக்கக்கூடிய  பாஜக என்ன  நினைக்கிறது என்று சொன்னால் ? இரண்டாவது இடத்தில் இருக்கக்கூடிய அண்ணா திமுக தொடர்ந்து பிளவு பட்டு இருந்தால்….. இந்த கட்சி அப்படியே உடைந்து கிடந்தால், நாம் இரண்டாம் இடத்தில் சென்று,  அப்படியே முதலிடத்திற்கு முயற்சிக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சி பகல் கனவு காண்கிறது.

முதலிடத்தில் இருக்கக்கூடிய திமுக என்ன நினைக்கிறது என்று சொன்னால் ? தொடர்ந்து நாம் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் சொன்னால் ? நமக்கு நேரடி போட்டியாளரான அண்ணா திமுக பிளவு உச்ச நிலையிலே இருக்க வேண்டும். இந்த கட்சியை உடைந்து கிடந்தால் மட்டும் தான்… தங்கள் ஆட்சியிலே இருக்கக்கூடிய அந்த அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று திமுக நினைக்கிறது.

ஆக திமுக நினைப்பதையும், பாஜக நினைப்பதையும் நிறைவேற்றக்கூடிய ஒருவராகத்தான் எடப்பாடி இருக்கிறார். காரணம் எடப்பாடியும் இந்த கட்சி பிளந்தே இருக்கணும் என்று நினைக்கிறார். இதனுடைய நோக்கம் என்ன ? அண்ணா திமுக  பிளவுற்று இருந்தால் திமுகவுக்கு தொடர் வாயுப்பு, அண்ணா திமுக  பிளவுற்று இருந்தால் மூன்றாம் இடத்தில் இருக்க கூடிய பாஜக முதலிடத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.