பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி,  இது பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கொள்கை முடிவு இது. அடிமட்ட கொள்கை முடிவு. எங்களுடைய மருத்துவர் அய்யாவுடைய, கொள்கை இது. விவசாயத்தை அழித்து, வேற எந்த ஒரு முன்னேற்றம் நமக்கு வேண்டாம். அது உண்மையான முன்னேற்றம் கிடையாது. அதே போன்று, தான் இந்த எட்டு வழிச்சாலை என்று சொன்னார்கள். முதலிலே, பத்து வழிச்சாலையாக இருந்தது. பிறகு எட்டு வழிச் சாலையாக குறைக்கப்பட்டது.

அதில் முதல் முதலில், அதில், இறங்கி போராடியவன், இந்த அன்புமணி ராமதாஸ். காரணம், பத்தாயிரம் ஏக்கர் விளை நிலங்களை, கையகப்படுத்த திட்டம் அது. உங்களுக்கு சாலை இல்லனா, கூட பரவாயில்ல, சேலம் – சென்னைக்கு  5 சாலைகள் இருக்கிறது. ஆனால், அதற்கு மேலே இன்னொரு, எட்டு வழிச்சாலை பத்தாயிரம் ஏக்கர் விளைநிலங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு, என்று முதலில் களத்தில் இறங்கி, ஒவ்வொரு ஊராகச் சென்று, கருத்துகளை கேட்டு,

பிறகு, என் பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்திலே, வழக்கை தொடுத்து,  பிறகு, அந்தத் திட்டத்தை கைவிடப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தில், நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதன் பிறகு, இவர்கள், உச்ச நீதிமன்றம் சென்றார்கள். உச்சநீதிமன்றத்திலே, நானும் சென்றேன். அங்கே, இப்போது அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அதேபோன்று, கோயமுத்தூர் கொங்கு பகுதியில், அன்னூர் என்ற பகுதியில, தமிழக அரசு அங்கே 3000 ஏக்கரில், இதேபோன்று ஒரு சிப்காட் தொழிற்சாலையை தொடங்குவோம், என்று அறிவித்தார்கள்.  இதேபோன்று, அங்கு அன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகள், அதை எதிர்த்து போராடினார்கள். அங்கே இருக்கின்ற விவசாய நிலம், 1700 ஏக்கர் பட்டா நிலத்தை, நாங்கள் கொடுக்க மாட்டோம், என்று அங்கு இருக்கின்ற விவசாயிகள் போராடினார்கள் என் கூறினார்.