காதலர் தினம் முடிவடைந்த நிலையில் திரை பிரபலங்கள் பலரும் தங்களின் காதலை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் காதலிப்பதாக கிசுகிசுக்க பட்டாலும் அவர்கள் அமைதியாக இருந்தனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகை 54 வயதாகும் அனு அகர்வால் தனக்கும் ஒரு ரிலேஷன்ஷிப் இருப்பதாகவும் கடந்த 30 வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளார்.

இவர் 1994 வெளியான திருடா திருடி திரைபடத்தில் இரண்டு நடிகைகளில் ஒருவராக நடித்திருந்தார். இவர் 1996 வரை மொத்தம் எட்டு வருடங்கள் மட்டுமே நடித்திருந்தார். தற்போது தான் காதலிப்பதாக கூறிய அவர் காதலன் யார் என வெளிப்படையாக கூறவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வரை அவ்வபோது சந்தித்து வருகின்றேன் எனவும் நாங்கள் திருமணம் செய்து கொள்வோமா என தெரியவில்லை எனத் தெரிவித்து இருக்கின்றார்.