
சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின் போது ரவி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து மறுநாள் காலை ரேவதி தனது குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைகளை விட்டுவிட்டு தனியாக வீடு திரும்பியதை அறிந்து கோபமடைந்த ரகு ரேவதியிடம் சண்டையில் ஈடுபட்டார். அப்போது திடீரென ரேவதியின் வயிற்றில் கத்தியால் கொடூரமாக குத்தியதில் ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மனைவி உயிரிழந்ததை அறிந்த ரகு செய்வதறியாமல் திணறிய நிலையில் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி தற்கொலை செய்ய முயன்ற போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.