இந்தியாவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஒரு நிரந்தர வருமானம் வேண்டும் என்று விரும்புவார்கள். இதில் குறிப்பாக தனியார் ஊழியர்கள் தங்கள் ஓய்வூக்கு பிறகு நிரந்தர ஓய்வூதியம் பெறுவது குறித்து திட்டமிட வேண்டும். ஓய்வுக்கு பணத்தை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்து சிலர் திட்டமிடுவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனியார் ஊழியர்கள் எப்படி ஓய்வூதியத்துக்கு சேமிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் இருவருமே இணைந்து பயன் பெறலாம்.

இந்த திட்டத்தில் இணைந்த பிறகு ஒரு பிரான் எண் வழங்கப்படும். இது உங்களின் நிரந்தர ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இணைந்து பயன் பெறலாம். ஒருவேளை வேறு நிறுவனத்திற்குபணிமாற நேரிட்டாலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உங்கள் பணம் பத்திரமாக இருக்கும் என்பதால் எந்த பிரச்சனையும் வராது. மேலும் வருமானவரிச் சட்டத்தின்படி தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய்  வரி விலக்கும்  கிடைக்கும் என்பதால் கண்டிப்பாக இந்த திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாக இருக்கும்.