இந்தியாவில் கடந்த வருடம் 34 லட்சம் பேருக்கு வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வழங்கப்படும் வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் குறித்து ஆண்ட்ரோமேடா என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் கடந்த 2022-ம் ஆண்டு வங்கிகளில் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களின் மதிப்பு 18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதன்படி 34 லட்சம் பேருக்கு 9 லட்சம் கோடி வீட்டுக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் கடந்த வருடம் தனிநபர் கடன்கள் 57 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த வருடம் 17 சதவீதம் அதிகமாக தனிநபர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று சிறு கடன்கள் துறையின் சந்தை மதிப்பும் 100 கோடியாக வெந்துள்ளதோடு இந்த துறையில் மட்டும் 54 கோடி கடன்கள் செயல்பாட்டில் இருக்கிறது. மேலும் வீட்டு கடன் மற்றும் தனிநபர் கடன்கள் வழங்குவதில் பொதுத்துறை மற்றும் தனியார் பங்குகள் இரண்டுமே சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.