துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர்,   இந்து மதம் ஒன்றுதான் உலகமே ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தது. உலகமே ஓன்று, எல்லோருக்கும் ஒரு ஆத்மா தான் இருக்கிறது. வாழ்க்கை முறை, அவர்களுடைய கோட்பாடுகள், எல்லாம் தனித்தனியாக தான் இருக்கும். ஆனால் இது எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஒரு கடவுள், ஒரு புத்தகம், ஒரு வாழ்க்கை முறை, அதை நான் மட்டும்  அனுசரிக்க மாட்டேன்.

மற்றவர்களும் அதை அனுசரிக்க வேண்டும் என்று கிறிஸ்தவமும்,  இஸ்லாமும் என்ற இரண்டு முக்கியமான மதங்கள் கிளம்பின. அவர்களைப் பொறுத்தவரை அந்த கோட்பாடுகள் சரியாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கும் அந்த கோட்பாடுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் யுத்தங்கள் நடத்தியது. ஆனால் இன்றைக்கு இஸ்லாமில் இருக்கின்ற வேற்றுமைகள்,  கிறிஸ்தவத்தில் இருக்கின்ற வேற்றுமைகள் அதை நாம் கொஞ்சம் ஆழ்ந்து படிச்சால் தான் தெரியும்.

கிறிஸ்துவத்தில் ஒரு நூறு சர்ச் இருக்கிறது என்றால், இப்போது 600,  700  சர்ச் இருக்கின்றது. இப்போ ஒருசர்ச்ல இருக்கின்றவர்கள் இன்னொரு சர்ச்சுக்கு போக மாட்டார்கள், அனுமதிக்க மாட்டார்கள். ஒரு சர்ச்சுக்கு  ஒரு நல்லடக்கம் செய்ய இடம் இருந்தால், இன்னொரு சர்ச்சில் உள்ளவர்கள் இறந்தால் அதில் அடக்கம் செய்ய  அவர்களுக்கு அனுமதி கிடையாது. நம்ம மாதத்தில் பார்த்தீர்கள் என்றால்,

யார் இறந்தாலும் ஒரே இடத்தில் தான் நாம் போவோம், இது ஒற்றுமை இல்லையா?நாம எல்லாரும் எல்லா கோவிலுக்கும் போவோம், அது  ஒற்றுமை இல்லையா?  நாம் எல்லோரும் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடுவோம்.  அவரவர்கள்  வீட்டில் தான் கொண்டடுவோம்,  அது ஒற்றுமை இல்லையா ? ஒற்றுமை என்பது மனதளவில்  நாம தான் உலகத்திற்கு சொன்னோம்…. மனதளவில்  ஒற்றுமை  போதும்….  சித்தாந்தம் அளவில்  ஒற்றுமை போதும்…. கடவுள் நம்பிக்கை ஒற்றுமை வேண்டும்.

முதலில் கேட்டால்,  முப்பத்து முக்கோடி என்று சொல்லுவார்கள்.  ஒவ்வொரு ஆளுக்கு ஒரு கடவுள் வச்சி இருந்தோம். நீ இஷ்டப்படி வச்சிக்கோ…. தனிநபருக்கு ஒரு கடவுள், கிராமத்திற்கு ஒரு கடவுள், குலத்திற்கு ஒரு கடவுள், நினைத்தே பார்க்க முடியாது. ஆனால் எல்லாவற்றிற்கும் பின்னால், பிரம்மன் என்ற ஒரு ஒரே கடவுள்தான் இருக்கின்ற நம்பிக்கை நமக்கு இருப்பதால்தான்,  நாம் ஒரு நாடாக இருக்கிறோம்.

அதனால் இந்துக்கள் ஒற்றுமை இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. இந்த ஒற்றுமை யாருக்கும் எதிராக  அல்ல. மற்றவர்களுக்கு எதிரான ஒற்றுமையை நம்மால் உருவாக்க முடியவில்லை. ஆனால்  உருவாக்கினால்,  அது நமக்கும் நல்லதல்ல…. மற்றவர்களுக்கும் நல்லதல்ல….  அந்த ஒற்றுமை தேவையில்லை என்பது என்னுடைய அபிப்பாயம் என தெரிவித்தார்.