மும்பையை அடுத்த வசாய் சின்சோட்டி பகுதியில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஷா (25) என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் “காஷ்மீர் பனேகா பாகிஸ்தான்” (காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கமாகும்) என்ற வரிகள் கொண்ட பாகிஸ்தான் ஆதரவு பாடல் சத்தமாக ஒலித்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்துல் ரகுமானைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.யூடியூப்பில் தற்செயலாக இந்தப் பாட லை ஒலிக்கச் செய்துவிட்டதாக அவர் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.

ஆனால், அந்தப் பகுதி மக்கள் இதனை மறுத்துள்ளனர். ஏற்கனவே பலமுறை இது போன்ற தேச விரோதப் பாடல்களை அவர் ஒலிபரப்பியதாகவும், பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை என்றும் புகாரளித்துள்ளனர்.

தேசத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் திட்டமிட்டே இதைச் செய்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.