திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சதீஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் உதவியாளராக சோலை என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சதீஷ் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் சோலை படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.