ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் புதூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தருண்குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தருண்குமாருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி தருண்குமார் மாணவியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தருண்குமாரை கைது செய்தனர்.