ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, ஒரு நாள் இந்த போராட்டக் குழுவின் மூலமாக தொண்டனுக்கு தெரிய வரும். எடப்பாடி பழனிச்சாமி என்பவன் இன்னொரு கருணாநிதியை போல என்று…  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்னொரு கருணாநிதி என்பது தெரியவந்து,

புரட்சித்தலைவி அம்மாவிற்கு இந்த கட்சியில் இப்பொழுது எந்த பதவியும் இல்லை என்பதை அந்த அணியில் இருக்கக்கூடிய தொண்டன் கூட உணரும் பொழுது, அவனுக்குத் தெரிந்து… புரட்சித்தலைவி அம்மாவிற்கு துரோகம் விளைவித்து விட்டோம். அதற்கு காரணம் இந்த எடப்பாடி பழனிச்சாமி என்பதை உணரும் பொழுது,  அண்ணன் ஒருங்கிணைப்பாளர் பின் அனைவரும் திரள்வார்கள்.

கட்டாயம் நாம் புரட்சித் தலைவரின் ஆன்மா உதவியோடு, எந்த சட்டவிதியை புறக்கணித்து இந்த கட்சியை கைப்பற்ற துடிக்கிறானோ எடப்பாடி பழனிச்சாமி, அதை கண்டித்து புரட்சித்தலைவர் ஆன்மாவும்,  எந்த தொண்டர்களும் கட்சியின் தலைவர்களும் தனக்கு அளித்த நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு ஆசைப்பட்ட எடப்பாடியை கண்டிக்கும் வகையில்,

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆத்மாவும்,  தொண்டர்கள் தாமதமாக புரிந்து கொண்டு புத்தி மாற்றமும் ஏற்படும்பொழுது…  கட்டாயமாக நமது ஒருங்கிணைப்பாளர்கள் கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒற்றை தலைமையாக வரும் என தெரிவித்தார்.