ஓபிஎஸ் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிர்வாகி ஒருவர், அதிமுகவில் 2010இல் நடந்த அந்த மாநாடு தான் திருப்புமுனை மாநாடு. அப்பதான் அந்த மாநாட்டில் சொன்னாங்க….  கனிமொழிக்கு உங்க ராசா வேணா ராசாவா  இருக்கலாம். எங்களுக்கு வந்து குஜா என்றாங்க. அந்த வார்த்தை இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது, 2011ல் ஆட்சியை புடிச்சிட்டோம். அடுத்த மாநாடு ஓபிஎஸ் அண்ணே மதுரையில நடத்துனாங்க.

அது தான் மாநாடு. தொண்டர்கள் வெகுண்டெழுந்து,  திரண்டு எழுந்து வந்து,  மிகப்பெரிய ஆர்ப்பரிக்கும் கூட்டம் மதுரையில் இருந்தது. அந்த கூட்டம் கண்டிப்பா..  இன்னைக்கும் மதுரையில் இருக்கு. அந்த தொண்டர்கள் எல்லாம் அண்ணன் ஓபிஎஸ் அவர்களோடு பயணித்து கொண்டு இருக்கிறார்கள்.  கண்டிப்பா சொல்கிறேன்… இன்னைக்கு சொல்றேன்…. இந்த இடத்தில் நின்று சொல்றேன்…

அண்ணா திமுகவின் கொடியை பிடிக்கக்கூடிய தகுதியும்,  தலைமையும், வாழும் புரட்சித்தலைவராக… மூன்றாம் தலைமுறை தலைவராக ஐயா ஓபிஎஸ் அவர்கள் உறுதியாக வருவார். அதுல யாருக்கு எந்த சந்தேகமும் இல்லை.. 2022 ஜனவரி போன வருஷம் ஜூன் மாசம் 23ஆம் தேதி பொதுக்குழு நடத்துநாங்க. ஜூலை 11 போலி பொதுக்குழு நடத்துனாங்க. 

23 பொதுக்குழு முடிச்சுட்டு 26 ஆம் தேதி தலைவர் மதுரைக்கு போகும் பொழுது நிர்வாகிகள் இல்லை… மாவட்ட செயலாளர்கள் இல்லை… நான்  தனி ஆளாக தலைவரை வரவேற்புக்கு கூட்டிட்டு போகும் போது 40,000 தொண்டர்கள் தலைவர் பின்னாடி திரண்டு வந்தாங்க. இன்னைக்கு 4 லட்சம் தொண்டர்கள் நின்னுட்டு இருகாங்க. அதனால சொல்லுறேன்,  தென் மாவட்டத்துல இருந்து ஒரு வண்டிகூட அவங்களால கூப்பிட முடியல என தெரிவித்தார்.