திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, சாதி எங்கெங்கெல்லாம் இருக்கு…  எங்க உதயநிதி என்ன பதில் சொன்னார் ? இது இந்து மதத்தை எதிர்த்து நான் சொல்லப்பட்ட கருத்து அல்ல. எல்லா மதத்திலும் இருக்கு ஜாதி. கிருஸ்துவ மதத்துல இல்லையா ஜாதி ? திண்டுக்கல் பக்கத்துல சுடுகாட்டுக்கு….  உயர்ந்த ஜாதி சுடுகாடு, தாழ்ந்த ஜாதி சுடுகாடு. ரெண்டுக்குமிடையில  காம்பவுண்ட் வால் போட்டு இருக்கான்.

சுடுகாட்டுக்கு எதுக்குடா காம்பவுண்ட் சுவர்…. அங்க உள்ள இருக்குறவன் எந்திச்சி, குதிச்சி, தப்பிச்சா போயிற  போறான். சுடுகாட்டுல உயர்ந்த ஜாதிக்கும்,  தாழ்ந்த ஜாதிக்கும் இடையில காம்பவுண்ட் சுவர்  போட்டு இருந்தான். அதை மூன்று குருமார்கள் இடித்து…  இன்னைக்கு ஒன்னு ஆக்கிருந்தாங்க. இன்னைக்கும் திண்டுக்கல்ல சுத்தி இருக்கக்கூடிய கிராமங்கள்ல உயர்ந்த ஜாதிக்கு தனி சுடுகாடு…. தாழ்ந்த ஜாதிக்கு தனி சுடுகாடு இருக்கு.

இதைத்தான் என் தம்பி உதயநிதி எதிர்த்தாரே ஒழிய,  எந்த மதத்தையும் புண்படுத்துவதற்காக… அவர்கள் இந்த கருத்தை சொல்லவில்லை. ஆனால் பாரதிய ஜனதா ஏதோ இந்துக்களுக்கு எதிரான ஒரு இயக்கம் திமுக என்று பொய் பிரச்சாரத்தை அவர்கள் அவிழ்த்து விடுகிறார்கள்… இதே மாதிரி தான் 1967 திமுக ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பிரச்சனையை கிளப்பினான்னா….

திமுக ஆட்சிக்கு வந்திருச்சு….  அவங்க எல்லாம் கடவுள் இல்லைன்னு சொல்றவங்க….  ஆட்சிக்கு வந்த உடனே எல்லா இந்து கோயிலை மூடிடுவாங்க….  எல்லா சர்ச்சையும் மூடிடுவாங்க….  நாம்  எல்லாம் சாமி கும்பிடுவதற்கு முடியாது…. முளைப்பாரி எடுக்க முடியாது….. மாரியம்மன் திருவிழா கொண்டாட முடியாது…. கும்பகோணத்தில் போய் குளிக்க முடியாது…. ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரை போக முடியாது…. ஆஹா ஓஹானு பிரச்சாரம் பண்னாங்க என தெரிவித்தார்.