செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”இந்தியா” தட் இஸ் ”பாரரத்” இப்போ நம்ம நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்  ”இந்தியா” தட் இஸ் ”பாரரத்”ஆ   ? ”பாரரத்”  தட் இஸ் ”இந்தியா”ஆ  ? அப்படிங்குற விவாதம் 1940 காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றும் போது நடந்துச்சு. அப்போ  நிறைய நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்றால் ? காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்திய போது, ”பாரத்”  தட் இஸ் ”இந்தியா” என சொல்லும் போது, அது ஓட்டெடுப்பு நடத்தபட்டது. 37/ 51 ஓட்டு.

37 பேர் ”பாரத்” என்கிற பெயரும்,  51 பேரும் ”இந்தியா” என்ற பெயர். 1st எது வரனும்  ? 2nDல எது வரணும் ? ( ”இந்தியா” தட் இஸ் ”பாரரத்”)ஆ   ? (”பாரத்”  தட் இஸ் ”இந்தியா” ) அன்னைக்கு காங்கிரஸ்  பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தியும் கூட ”பாரத்” என்கிற பெயருக்கு 37 பேர் வாக்களித்தார்கள். அதனால தான்  ”இந்தியா” தட் இஸ் ”பாரரத்”  என வந்தது.அம்பேத்கர் அவர்கள் வாக்கு கொண்டு போனவர்கள். இதையெல்லாம் நாம படிக்கனும். அதை படிச்சால் தான் தெரியும் .

எனவே இல்லாத பிரச்சனையை,  எதிர்க்கட்சி நண்பர்கள் பிரச்சனையாக உருவாகிறார்கள்.எனவே இந்தியாவும் இருக்கு, பாரத் என்றும் இருக்கு. ஒருவேளை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக… இல்ல நாம்  பாரத் என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என சொன்னா… நான் பேசுறேன். இன்னைக்கு பிரதமரை பொறுத்தவரை பெயர் பலகை, அழைப்பிதழில் அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கோ, அதைத்தான் செய்கின்றோமே தவிர, புதிதாக ஒரு பெயரை நாம் கொண்டு வரவில்லை.

இரண்டு பெயரும் (Inter change) மாற்றிக்கொள்ளக்கூடியது.  ரெண்டு பெயரையும் மாத்திக்கலாம். ரெண்டு பெயருமே  அரசியல் சட்டத்தில் ஆர்டிகல் 1 ”இந்தியா” தட் இஸ் ”பாரரத்”  ”இந்தியா” என்கிற பாரதம் என்பது தான் பொருள்.விவாதத்தில் பாரத் என்கின்ற இந்தியாவை வைக்கலாம் எனும் போது அது,37 / 51  ஓட்டு வாங்கிச்சு. எனவே இது அப்பவே விவாதிக்கப்பட்டது தான் என  தெரிவித்தார்.