தமிழக அரசியல் வரலாற்றிலேயே பொய்களை மட்டுமே பேசும் ஒரு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விளங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஈரோட்டில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், திமுக தலைவர் பதவியை கருணாநிதி தனது வாழ்நாளின் கடைசி வரை ஸ்டாலினிடம் ஒப்படைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி வம்புக்கு இழுத்தார்.
மேலும், திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாகச் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் சாடினார். தனது பேச்சின் போது திமுக ஆட்சியில் சுமார் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகப் பகீர் புகார் ஒன்றை கிளப்பிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் மக்களிடம் பட்டியலிட்டார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினையும் திமுகவின் வாரிசு அரசியலையும் குறிவைத்து இபிஎஸ் நடத்திய இந்த அதிரடித் தாக்குதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
