தமிழ்நாடு அரசு சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்கான முன்பணம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை என மொத்தம் ரூ. 5,000 தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தது. இந்தத் தொகையை பெரும்பாலான பெண்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் அந்தத் தொகையை மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் தனது குடும்பச் சூழல் தற்போது வசதியாக இருப்பதாகவும், அரசு வழங்கும் இந்த நிதியுதவி தங்களை விட ஏழ்மையில் இருக்கும் தகுதியுள்ள மற்ற பெண்களுக்குப் பயன்படட்டும் என்ற உயரிய நோக்கத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அரசின் திட்டங்கள் உண்மையாகவே தேவையுள்ளவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற விழிப்புணர் ஏற்பட்டுயுள்ளது.
மேலும் தனக்குத் தேவையில்லாத போது அந்தப் பணத்தைப் பற்றிக்கொள்ளாமல் நேர்மையுடன் திருப்பித் தந்தது பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. தகுதியுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, இது போன்ற தனிமனிதர்களின் நேர்மையான பங்களிப்பு பெரும் வலுசேர்ப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
