பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா தமிழில் வல்லக்கோட்டை, முரண், கனகவேல் காக்க, நான் மிருகமாய் மாற உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 30 வயது ஆகிறது. இந்நிலையில் கன்னட பாடகரும், நடிகருமான வசிஷ்ட சிம்ஹாவும், ஹரிப்பிரியாவும் காதலித்தனர். இருவீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததால் சமீபத்தில் பெங்களூரில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் வருகிற 26-ஆம் தேதி மைசூரில் இருக்கும் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா ஆஸ்ரமத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஹரிபிரியாவும், வசிஷ்ட சிம்ஹாவும் ஆஷ்ரமத்திற்கு சென்ற மடாதிபதியை சந்தித்து பேசி திருமண தேதியை உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.