கடந்த வருடம் மார்ச் மாதம் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் பல சர்வதேச விருதுகளையும் பெற்று படம் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சைனீஸ் ஐமேக்ஸ் தியேட்டரில் இந்த திரைப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. அதன் அறிவிப்பு வெளியாகிய 98 வினாடிகளில் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தகவலை நிகழ்ச்சியை நடத்திய பியாண்ட் பெஸ்ட் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்திய படமும் இப்படி திரையிடப்பட்டது இல்லை எனவும், இயக்குனர் ராஜமௌலிக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் பியாண்ட் பெஸ்ட் அமைப்பு கூறியுள்ளது.