பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் தான் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் எலிமினேஷன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ரசிகர்கள் யாரும் சற்றும் எதிர்பார்க்காத ரச்சிதா தான் குறைவான வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த எலிமினேஷன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 23 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.