தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் விக்ரம் திரைப்படம் அண்மையில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ், மணிரத்தினம், எச். வினோத் உட்பட 4 இயக்குனர்களின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

அதோடு தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இப்படி படு பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் கமல் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய வீட்டிற்கு புதிதாக ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்துள்ளார். இவர் அந்த நாய்க்குட்டியை ஒரு பையில் வைத்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.