ஏகே 62 திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. மேலும் சென்ற டிசம்பர் 31-ம் தேதி டிரைலர் வெளியாகி படு வைரலானது. இத்திரைப்படம் வரும் 11-ம் தேதி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்திற்கான முதல் கட்டப்பணியில் விக்னேஷ் சிவன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாகவும் காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் சந்தானம் முக்கிய வேதத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்ட நிலையில் இந்தப் படத்தில் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.