ஐதராபாத் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள மன்னத் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், பர்தா அணிந்த பெண்கள் கூட்டத்தோடு கூட்டமாகப் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் சாப்பிடுவதிலும், பேசுவதிலும் மும்முரமாக இருந்ததைக் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தப் பெண்கள், அங்கிருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணப்பைகளை (Purse) லாவகமாகத் திருடிச் சென்றுள்ளனர். தங்களின் உடமைகள் காணாமல் போனதை அறிந்த விருந்தினர்கள் அதிர்ச்சியடைந்து மண்டப நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
Two women allegedly stole several purses from a wedding ceremony at Mannat Function Hall in Chandrayangutta. The theft came to light after guests found their bags missing. CCTV footage reportedly captured the suspects. pic.twitter.com/4ylJHfjy9b
— The Siasat Daily (@TheSiasatDaily) December 28, 2025
நிர்வாகத்தினர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, பர்தா அணிந்த இரண்டு பெண்கள் மிகவும் திட்டமிட்டு பைகளைத் திருடிக்கொண்டு நழுவிச் செல்வது உறுதியானது.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள பண்ட்லாகுடா போலீஸார், காணாமல் போன செல்போன் சிக்னலை வைத்துத் திருடிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கல்யாண வீடுகளில் அடையாளம் தெரியாத நபர்களிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
