மல்லுயுத்த உலகின் ஈடுஇணையற்ற வீரராகத் திகழ்ந்த ஜான் சீனா, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற தனது இறுதிப் போட்டியுடன் மல்லுயுத்தப் பயணத்திலிருந்து விடைபெற்றார். இப்போதே கடைசி முறை என்னும் வாசகத்துடன் அவர் களமிறங்கிய இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், ரசிகர்கள் அவர் மீது கொண்டுள்ள மதிப்பு சற்றும் குறையவில்லை.
View this post on Instagram
ஜான் சீனாவின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து அவரது பழைய நினைவுகள் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், மணமகன் ஒருவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜான் சீனா பாணியில் நுழைந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த 24 வினாடி காட்சியில், ஜான் சீனாவைப் போலவே கைகளை விரித்து, சல்யூட் அடித்து மேடையை நோக்கி உற்சாகமாக ஓடி வந்த மணமகன், அதே பாணியில் தனது கையில் இருந்த பட்டையை அகற்றுவது போன்ற சைகைகளுடன் மேடைக்கு நுழைந்தார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொலியை இதுவரை இருபத்திரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதோடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர். மல்லுயுத்த வீரர் மீதான அந்த மணமகனின் அளவற்ற அன்பை இது பறைசாற்றுவதாக இணையவாசிகள் பலரும் வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
