பெங்களூருவில் ஒரு ஹோட்டல் உரிமையாளர், தனது மனைவியை வேலையை விட்டுவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி வத்சலா மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவன் அவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மனைவியின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த அடையாளங்கள் இருந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியைக் கொன்ற பிறகு, அந்த ஹோட்டல் உரிமையாளரும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், இரண்டு உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாகக் கொலை மற்றும் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இந்த விபரீத முடிவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
