UPI அப்ளிகேஷன்களை பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துச் செல்லும் தேவை ஏற்படாது. சந்தைக்கு வர தொடங்கியுள்ள UPI ATM மெஷின் பயன்பாட்டில் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். எவ்வளவு பணம் எடுக்க போகிறோம் என்பதை தேர்வு செய்து விட்டு க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் பணம் கைக்கு வந்து விடும்