தென் மாவட்டங்களில் சாதி அடக்குமுறை சங்கவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஒரு சமூக ஒற்றுமையை  குறிப்பிட்ட சிலர் சீரழிக்கின்றார். அதனால அவங்களை மட்டும் வேரோட புடுங்கி எரிஞ்சுட்டா எல்லா சாதியையும் சமத்துவம் வந்துரும்.

எல்லாருமே கரெக்டா இருப்பாங்க. அதனால மத்திய அரசு தன்னுடைய IP, NIA   மூலமாக…. மாநில அரசு முடிஞ்சா ஒரு அனைத்துக் கட்சி  கூட்டத்தை போட்டு,  ஏன் தென் தமிழகத்தில் மீண்டும் இது மாதிரி வன்முறை நடக்கிறது என்பதைப் பற்றி பேசணும்.

அனைத்துக் கட்சி என சொல்லி, சட்டமன்ற கட்சியை மட்டும் கூப்பிட்டு, அவுங்க கூட்டணி கட்சி மட்டும் கூப்பிட்டு, ஒன்னும் இல்லைன்னு ரிப்போர்ட் கொடுக்க கூடாது. தமிழகத்தில் உள்ள எல்லா கட்சியையும் அழைச்சி… அந்த டீம் கூட தென் தமிழகத்தில் ஒரே சுற்றுப்பயணம் மேற்கொள்ள….

எல்லா கிராமத்துக்கும் போகணும்…  குறிப்பாக ஸ்ரீவைகுண்டம்,   கருங்குளம், கயத்தாரில் இதான் இதுபோல நடக்குது, மேலநல்லூர், அம்பாசமுத்திரம், உசிலம்பட்டி,   பேரலூர், ஆண்டிபட்டி சேரன்மகாதேவியில் நடக்குது.  சேரன்மகாதேவியில் டிரைவர், கண்டக்டர் வெட்றாங்க. அதேபோல நாங்குநேரி ஏரியால ஒரு பகுதியில்…. மேற்கு பகுதியில மட்டும் நடக்குது. இந்த சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட ஒரு பகுதி என  நடக்குது என விமர்சனம் செய்தார்.