செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டமன்ற தீர்மானங்களை வரவேற்கின்றேன். ஆளுநர் பதவி அனுப்ப வேண்டிய பதவி என முதலமைச்சர் முக.ஸ்டாலின் சொன்னதை, பல காலமாகநான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆட்டுக்கு தாடி, நாட்டு ஆளுநர் அவசியமற்றது என்று நமக்கு முன்னாள் பேரறிஞர் அண்ணா பேசியிருக்கிறார். ஆளுநர் ஒரு தொங்கு சதை.. ஐந்து விரல் இருக்கிறது.

அவசியமாக இருக்கிறது…  இங்கு சதை… ஒரு விரல் இருந்தால் எப்படி இருக்கும் ? எரிச்சலாக இருக்கும்… அது மாதிரி தான்….  மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தான் அதிகாரம்….  எட்டு கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு  இல்லாத உரிமையும்,  அதிகாரமும்  ஒரு நியமன உறுப்பினருக்கு எப்படி வந்து விடுகிறது? எங்க காசில் சம்பளத்தை வாங்கிவிட்டு… எங்களுக்கு எதிராக சிந்தித்து பேசிக்கொண்டு, கையெழுத்து போடவில்லை என்றால் எப்படி ? நீங்கள் சொல்லுங்கள்….

சம்பளம் கொடுக்கின்ற முதலாளிகளுக்கு கொஞ்சம்  விசுவாசமாக இருப்பா… எப்பவுமே ஆளுகின்ற பிஜேபி என்ன பண்ணும் என்றால், அவர்கள் ஆளாத மாநிலங்களில் இந்த மாதிரி ஒரு ஆளுநரை போட்டு குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கணும்…. ஐயா. நாராயணசாமியை கிரண்பேடி என்ன பாடுப்படுத்தினார் ? ஒரு வேலை  கூட அவரால் செய்ய முடியவில்லை. எதுவுமே கையெழுத்து போடாமல் இருந்தார்.