தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பேருந்து மட்டுமே ஏகப்பட்டதால் ஓட்டுநர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் அரசு பேருந்தை இயக்கியுள்ளனர். அதன்படி காலை 11 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இந்நிலையில் அண்ணா பாலம் அருகே சென்றபோது அரசு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது தனியார் பேருந்து ஓட்டுனர் வெங்கடேசன் என்பவர் அரசு பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக வெங்கடேசன் கள்ளக்குறிச்சிக்கு பேருந்தை இயக்கியதாக கூறியுள்ளார். பின்னர் விபத்துக்குள்ளான அரசு பேருந்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.